வாழைக்காய் வறுவல் தேவையான பொருட்கள் வாழைக்காய் - 2 பூண்டு - 5 பல் வரமிளகாய் - 10 சோள மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. வாழைக்காய் நீள நீளத் துண்டுகளாக விரல் மொத்தத்தில் நறுக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுக்கவும். 3. வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3. வெந்நீரில் போட்டு எடுத்த வாழைக்காயுடன் அரைத்த மசாலா விழுது, சோளமாவு ஆகியவற்றைச் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறிக் கொள்ளவும். 4. எண்ணெயைக் காயவைத்து பிசறிவைத்த வாழைக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |