சேனைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் சேனைக்கிழங்கு - 1/4 கிலோ மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா அரைக்க சோம்பு - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 6 மிளகு - 1/2 தேக்கரண்டி வரமிளகாய் - 2 தேங்காய் - ஒரு துண்டு செய்முறை 1. சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக விடவும். 3. மசாலா பொருட்களை தனியே அரைத்துக் கொள்ளவும். 4. வேகவைத்த கிழங்குடன் அரைத்த மசாலா, சோள மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறுங்கள். 5. எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |