http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கறிவேப்பிலை சாதம் | காய்கறி சாதம் | காளான் பிரியாணி | குஸ்கா
தக்காளி சாதம் | தேங்காய் சாதம் | தேங்காய்ப்பால் புலாவ் | நெய் சாதம்
நெல்லிக்காய் சாதம் | பச்சைப்பயிறு சாதம் | பருப்பு சாதம் | புளி சாதம்
மாங்காய் சாதம்





குஸ்கா

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - ஒரு கோப்பை
கடலைப் பருப்பு - கால் கோப்பை
எண்ணெய் & வெண்ணெய் - 5 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலம் - ஒன்று
கிராம்பு - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - எட்டு இதழ்
கொத்துமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
தக்காளி - சிறியது ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் ‍- அரை தேக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை பழம் (சிறியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசி மற்றும் கடலைப் பருப்பை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2. அரிசி குக்கரில் எண்ணெய் & வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயத்தை சிவக்க விட வேண்டாம். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

3. பச்சை வாடை அடங்கியதும் தக்காளியை நான்காக வெட்டி சேர்த்து மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா, மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.

4. ஒரு கோப்பை அரிசிக்கு ஒன்றரை குவளை (டம்ளர்) தண்ணீரும், கால் கோப்பை பருப்பிற்கு அரை குவளை (டம்ளர்) தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும்.

5. அரிசி குக்கர் இல்லை என்றால் சாதா குக்கரிலும் வைக்கலாம்.

6. சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குஸ்கா ரெடி. இதை கிச்சிடி என்றும் சொல்லலாம்.

குறிப்பு

1. குஸ்கா ஒரு சுவையான காலை நேர உணவாகும். சூடாக கொத்து மல்லி துவையல் (அ) புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

2. மதிய உணவிற்கு என்றால் மீன் குழம்பு, கார குழம்பு வகைகள் பொருந்தும்.

3. வெண்ணெய் வேண்டாம் என்றால் வெறும் எண்ணெயே போதுமானது. நெய்யில் தாளித்தாலும் சுவை நன்றாக இருக்கும்.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/varietyrice/kuska.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs