தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள் அரிசி - 1 கோப்பை (200 கிராம்) தேங்காய் - 1 மூடி பச்சைமிளகாயம் - 2 இஞ்சி - 1/4 துண்டு கறிவேப்பிலை - 3 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை நிலக்கடலை - 25 கிராம் எண்ணெய் -25 கிராம் உப்பு - 1 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை கழுவிவிட்டு 2 1/2 கோப்பை தண்ணீர் விட்டு சாதம் குலையாமல் வேகவைக்கவும். 2. வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும். 3. தேங்காயை துருவிக் கொள்ளவும். 4. இஞ்சியை பொடியாக துருவிக் கொள்ளவும். 5. நிலக்கடலையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். 6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். 7. அதனுடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயம், துருவிய இஞ்சி போட்டு வதக்கவும். 8. அடுத்து துருவிய தேங்காயை போட்டு நன்றாக வதக்கவும். 9. பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும். 10. இதனுடன் ஆற வைத்த சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு சாதம் குலையாமல் கிளறவும். குறிப்பு 1. கறிவேப்பிலை சட்னி அல்லது புதினா சட்னி, தேங்காய் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |