http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கறிவேப்பிலை சாதம் | காய்கறி சாதம் | காளான் பிரியாணி | குஸ்கா
தக்காளி சாதம் | தேங்காய் சாதம் | தேங்காய்ப்பால் புலாவ் | நெய் சாதம்
நெல்லிக்காய் சாதம் | பச்சைப்பயிறு சாதம் | பருப்பு சாதம் | புளி சாதம்
மாங்காய் சாதம்





தேங்காய்ப்பால் புலாவ்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 குவளை (250 கிராம்)
தேங்காய் துறுவல் - 1 கோப்பை
பெரிய வெங்காய் - 1
லவங்கம் - 5
பட்டை - 2 (1 இஞ்ச் அளவு)
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
பொதினா - 10 இலைகள்
கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

2. தேங்காய்த் துறுவலை மிக்ஸியில் மைய அரைத்து இருமுறை பால் (3 குவளை அளவுக்கு) எடுத்துக் கொள்ளவும். (1 குவளை அரிசிக்கு 3 குவளை தேங்காய்ப்பால்)

3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலையை போட்டு தாளிக்கவும்.

4. வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும்.

5. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.

6. அதனுடன் பொதினா, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

7. அனைத்தும் நன்கு வதங்கியதும் தயிரைச் சேர்த்து, ஒரு பிரட்டு பிரட்டியதும் உடனே தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.

8. இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

9. கொதி வந்ததும், ஊற வைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக விடவும்.

10. குக்கரில் ஆவி அடங்கியதும் சாதம் குலையாதவாறு லேசாகக் கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. பொதினா, கறிவேப்பில்லை, கொத்தமல்லி ஆகியவற்றை தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு சேர்த்தாலும் வாசனையாகவே இருக்கும்.

2. தேங்காய்ப் பால் எடுக்கும் போது சிறிது சுடு தண்ணீர் சேர்த்து அரைத்தால் பால் நன்றாக வரும்.

3. புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, பாசுமதி அரிசி எதில் வேண்டுமானாலும் செய்யலாம். உபயோகிக்கும் அரிசிக்கு ஏற்றவாறு தண்ணீரை (தேங்காய்ப்பால்) சேர்ப்பது அவசியம்.

4. அரிசி அதிகம் குலையாமல் பார்த்துக் கொள்ளவும். உபயோகிக்கும் அரிசிக்கு ஏற்றவாறு குக்கரில் விசில் விடவும்.

5. இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு குருமா நன்றாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/varietyrice/coconutmilkpulav.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs