மெது வடை
தேவையான பொருட்கள் உளுந்து - 1/4 கிலோ அரிசி மாவு - 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) எண்ணெய் - 1/2 லிட்டர் உப்பு -தேவையான அளவு செய்முறை 1. அரை மணி நேரம் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிகவும் நைஸாக ஆட்டிக் கொள்ளவும். 2. இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும். 4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். குறிப்பு 1. எண்ணெய் சரியாக சூடாகாமல் வடை போட்டால் எண்ணெய் குடிக்கும். 2. வடைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும். ஆக்கம் ச.சுதாதேவி
சென்னை-600050.அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |