ரவா தோசை
தேவையான பொருட்கள் ரவை - 400 கிராம் (2 கோப்பை) அரிசி மாவு - 1 மேஜைக் கரண்டி மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும். 3. பின்னர் அதனுடன் வறுத்த ரவை, மைதா மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். 4. பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, கலந்து வைத்த மாவில் கொட்டவும். 5. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். 6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். குறிப்பு 1. மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது. 2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |