இட்லி
தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 1 கிலோ உளுந்து - 200 கிராம் அவல் - 1 கைப்பிடி வெந்தயம் - 1 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை, வெந்தயத்துடன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். 2. அரிசியை அரைப்பதற்கு 10 நிமிடம் முன் அவலை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். 3. அரிசி, வெந்தயத்துடன், அவலைச் சேர்த்து, நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும். 4. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும். 5. இரண்டு மாவையும் உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கி (கையினால்) வைக்கவும். 6. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும். 7. மாவு புளித்து மேலே வரும். அப்போது கரண்டியை விட்டு நன்றாக கலக்கி, இட்டிலி தட்டில் எண்ணெய் தடவு மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து இட்லியாக வார்த்து எடுக்கவும். குறிப்பு 1. இட்லிக்கு தொட்டுக் கொள்ள தக்காளி, தேங்காய், கொத்தமல்லி சட்னிகளும், நல்லெண்ணெய் கலந்த இட்லிபொடியும் சுவையாக இருக்கும். 2. அவலை 10 நிமிடம் மட்டும் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் கூழ் போலாகிவிடும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |