http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
அரிசி மாவு புட்டு | இனிப்பு சோமாஸ் | களி உருண்டை | கேரட் கீர்
தேங்காய் பர்பி | பால் கீர் | பூர்ண கொழுக்கட்டை
பொட்டுக்கடலை உருண்டை | பொரி உருண்டை | முந்திரி பர்பி
ரவா கேசரி | ரவா புட்டு | ரவா லட்டு | ராகி அவல் புட்டு





இனிப்பு சோமாஸ்

தேவையான பொருட்கள்

ரவை - 1/2 கிலோ
மைதா - 1/2 கிலோ

பூரணம் செய்ய
நிலக்கடலை - 100 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
வெல்லம் - 1/4 கிலோ ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை

1. நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

2. பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார்.

4. அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

5. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

6. சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல் தேய்த்து நடுவில் 1 முதல் 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.

7. பிறகு கடையில் விற்கும் நெளி தேக்கரண்டியையோ அல்லது சோமாஸ் செய்வதற்கான அச்சையோ பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். இவை எதுவும் கிடைக்காத பட்சத்தில் கத்தி கொண்டு ஒரே சீராக ஓரங்களை வெட்டிக் கொள்ளவும்.

8. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் ஒட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சாப்பிட்டு மகிழவும்.

குறிப்பு

1. ஏலக்காய் பொடி செய்யும் போது 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

2. பூரணம் மிகுதியாகிவிட்டால் லேசாக தண்ணீர் தெளித்து உருண்டை பிடித்து நிலக்கடலை உருண்டையாகவும் செய்து கொள்ளலாம்.

ஆக்கம்

கோ. சுந்தரேஸ்வரி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/sweets/sweetsomas.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs