ரவா புட்டு தேவையான பொருட்கள் ரவை - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) தேங்காய் துருவல் - 1 கப் நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை 1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த ரவையை சிறிதளவு உப்பு கலந்த தண்ணீரில் பிசறிக் கொள்ளவும். 3. இக்கலவையை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக விடவும். 4. ரவை வெந்தவுடன் சூடாக இருக்கும்போதே சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் சிறிது நேரம் ஆவியில் வேக விடவும். 5. பிறகு தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. இந்த இனிப்பிற்கு ரவை சிறிது பெரியதாக இருக்க வேண்டும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |