ரவா லட்டு தேவையான பொருட்கள் ரவை - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) பால் - 1/4 லிட்டர் நெய் - 50 கிராம் திராட்சை - 10 செய்முறை 1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். அதனை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 2. சர்க்கரையையும், ஏலக்காயையும் மிக்ஸியில் தனித்தனியே பொடித்துக் கொள்ளவும். 3. பிறகு சர்க்கரையையும், ரவையையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். 4. இந்த கலவையில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். 5. பிறகு காய்ச்சிய பாலை சிறிது சிறிதாக சேர்த்து உருண்டை பிடிக்கவும். குறிப்பு 1. சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும். அப்போது தான் உருண்டை உதிராமல் இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |