http://www.samaiyalarai.com

அரிசி மாவு புட்டு | களி உருண்டை | பால் கீர் | பூர்ண கொழுக்கட்டை
பொட்டுக்கடலை உருண்டை | பொரி உருண்டை | முந்திரி பர்பி | ரவா கேசரி
ரவா புட்டு | ரவா லட்டு | ராகி அவல் புட்டு


பால் கீர்

தேவையான பொருட்கள்

பச்சரிசி அரிசி - 150 கிராம்
பால் - 1 லிட்டர்
முந்திரி - 10
பாதாம் - 10
வெள்ளரி விதை - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

1. அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. பாலில் ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

3. கொதிக்கும் பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு வேக விடவும்.

4. தனியே முந்திரி மற்றும் பாதாமை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

5. அரிசி வெந்ததும் சர்க்கரை, வறுத்த முந்திரி, பாதாம் சேர்த்து, இரண்டு கொதி வரும் வரை நன்கு வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. பாதாமை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தால் தோல் எளிதாக வந்து விடும். அதன் பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி முந்திரியுடன் சேர்த்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

2. விருப்பப்பட்டால் தேவையான அளவு மில்க் மெய்டு சேர்த்து செய்தால் மேலும் சுவையாக இருக்கும்.

ஆக்கம்

கோ.சுந்தரேஸ்வரி
சென்னை-50.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/sweets/milkgeer.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க

அரிசி மாவு புட்டு | களி உருண்டை | பால் கீர் | பூர்ண கொழுக்கட்டை
பொட்டுக்கடலை உருண்டை | பொரி உருண்டை | முந்திரி பர்பி | ரவா கேசரி
ரவா புட்டு | ரவா லட்டு | ராகி அவல் புட்டு



வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers

Google






தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.