அரிசி மாவு புட்டு தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி - 3/4 கிலோ சர்க்கரை - 1/2 கிலோ முந்திரி - 10 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) நெய் - 50 கிராம் உப்பு - சிறிதளவு செய்முறை 1. அரிசியை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 2. இதில் உப்பு கலந்த தண்ணீர் விட்டு பிசறிக் கொள்ளவும். 3. பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். 4. இந்த கலவை சூடாக இருக்கும் போதே சர்க்கரையையும், ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலக்கி தட்டில் வைத்து பரிமாறவும். குறிப்பு 1. உப்பு நீரில் அரிசி மாவை பிசையும் போது கட்டி தட்டாமல் பார்த்துக் கொள்ளவும். 2. தேவைப்பட்டால் தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |