http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
உருளைக்கிழங்கு மசாலா



உருளைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1 (சிறியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு)
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஒன்று இரண்டாக மசித்துக் கொள்ளவும்.

2. வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை இரண்டாக நீள வாக்கில் பிளந்து கொள்ளவும்.

4. தக்காளியைப் பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்கும் வரை வதக்கவும்.

6. பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, அதனுடன் வெட்டி வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

7. இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கியவுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 1 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

8. கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

குறிப்பு

1. மசாலா வாசனை தூக்கலாக வேண்டும் என்றால், கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். (இஞ்சி பூண்டு விழுது போடும் போது சேர்க்கவும்.)

2. கிழங்கை அதிகமாக மசித்துவிடாமல், கிழங்கு தெரியுமாறு ஒன்று இரண்டாக மசிக்க வேண்டும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/sidedishes/potatomasala.html




பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs