http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கருப்பு கொண்டை கடலை சுண்டல் | பஜ்ஜி | போண்டா





கருப்பு கொண்டை கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டை கடலை - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
சின்ன வெங்காயம் - முன்று
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
சர்க்கரை - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லித்தழை - 1 கொத்து
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கொண்டை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற போடவும்.

2. காலையில் கடலையை நன்கு களைந்து தண்ணீரை வடிக்கவும்.

3. பிறகு கடலையை குக்கரில் போட்டு முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து ஐந்து விசில் வரை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

4. குக்கர் ஆவி அடங்கியதும், கொண்டை கடலையை தண்ணீர் வடித்து வைக்கவும்.

5. ஒரு வாயகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கிள்ளி போட்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து, நன்கு கிளறி கடைசியாக கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும்.

6. அதில் வடித்து வைத்துள்ள வேக வைத்த கடலையை சேர்த்து, தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி இரண்டு நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கவும்.

7. கடைசியாக கொத்துமல்லித் தழை தூவி சாப்பிடவும்.

குறிப்பு

1. கொண்டை கடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. பருப்பு வகைகளில் நிறைய புரோட்டீன் உள்ளதால் வரம் இருமுறை சாப்பிடுவது நல்லது.

3. குழந்தைகளுக்கு மதிய உணவுக்கும் கொடுத்து அனுப்பலாம். குழதைகளுக்கு காரம் கொஞ்சம் குறைத்து கொள்ளவும்.

4. இஸ்லாமியர் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உண்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

5. நவராத்திரி கொலுவின் போது தினம் செய்யும் வகை வகையான சுண்டல் வகைகளில் இதுவும் ஒரு வகை சுண்டல்.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/savouries/karuppukondaikadalaisundal.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs