சாம்பார் பொடி தேவையான பொருட்கள் சிகப்பு குண்டு மிளகாய் - 50 கிராம் மல்லி (தனியா) - 100 கிராம் கடலைப் பருப்பு - 50 கிராம் துவரம் பருப்பு - 50 கிராம் மிளகு - 2 மேஜை கரண்டி காய்ந்த மஞ்சள் கொம்பு - 1 செய்முறை 1. சூரிய ஒளியில் அனைத்து பொருட்களையும் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும். 2. ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ பொடியாக்கிக் கொள்ளவும். 3. காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும். குறிப்பு 1. தேவைப்பட்டவர்கள் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து பொடித்துக் கொள்ளலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |