நிலக்கடலை பக்கோடா தேவையான பொருட்கள் நிலக்கடலை (வறுக்காதது) - 200 கிராம் கடலை மாவு - 1 1/2 கோப்பை அரிசி மாவு - 1/4 கோப்பை மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு பூண்டு - 5 பல் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தோல்நீக்கி கழுவி தனியே விழுதாக அரைத்துக் கொள்ளவும். 2. கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் தெளித்து நிலக்கடலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் பிசறவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், பிசறிய நிலக்கடலை கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுக்கவும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |