கேரட் பச்சடி தேவையான பொருட்கள் கேரட் - 2 தயிர் - 2 கோப்பை பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிய துண்டு தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி கடுகு - சிறிதளவு உளுத்தம்பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். 2. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். 4. பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் மேல் போடவும். 5. அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும். 6. பின்னர் தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. தேங்காய் துருவல் தேவைப்பட்டால் சேர்க்கலாம். 2. கேரட்டை வேக விடக் கூடாது. ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |