http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
ஓட்ஸ் தோசை | ஓட்ஸ் பொட்டுக்கடலை லட்டு




ஓட்ஸ் தோசை

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கோப்பை (250 கிராம்)
அரிசி மாவு - 1/2 கோப்பை (100 கிராம்)
கோதுமை மாவு - 1/2 கோப்பை (100 கிராம்)
ரவை - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. முதலில் ஓட்ஸை லேசாக வறுத்து தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு ஓட்ஸை கழுவி மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்து எடுத்த ஓட்ஸுடன் அரிசி மாவு, கோதுமை மாவு, ரவை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

4. இதனுடன் சீரகம், மிளகுத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து, 10 நிமிடம் மூடி வைக்கவும்.

5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி, பின்னர் ஓட்ஸ் தோசை மாவை நன்கு கலக்கி ஒரு கரண்டி எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி தோசையாக வார்த்து எடுக்கவும்.

குறிப்பு

1. கோதுமை மாவுக்கு பதிலாக மைதா மாவும் சேர்த்துச் செய்யலாம்.

2. தோசையில் புளிப்பு சுவை வேண்டுவோர், மாவுடன் ஒரு கரண்டி புளித்த மோர் அல்லது புளித்த இட்லி மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

3. மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்தால் தோசை மேலும் சுவையாக இருக்கும்.

4. ஓட்ஸ் தோசைக்கு தக்காளி சட்னி தொட்டுக் கொள்வதற்கு சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/oats/oatsdosai.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs