http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
ஆட்டுக்கால் மிளகு குழம்பு | ஆட்டுக்கறி வெண்டைக்காய் குழம்பு
ஆம்பூர் மட்டன் பிரியாணி | கிட்னி கூட்டு | கிட்னி ஃபிரை





ஆட்டுக்கால் மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
கொத்துமல்லித்தழை - கால் கட்டு
புதினா - சிறிது

வேகவைக்க தேவையானவை
ஆட்டுக்கால் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2 (பெரியது)
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி
தேங்காய்ப் பால் - அரை குவளை (டம்ளர்)
பாதாம் - எட்டு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி (கடைசியில் சேர்க்க)
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஆட்டுக்காலை சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2. பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கி அரைத்து தேங்காய்ப் பாலுடன் சேர்க்கவும்.

3. சுத்தம் செய்த ஆட்டுக்காலுடன் வேகவைக்க தேவையான பொருள்களைச் சேர்க்கவும்.

4. ஆட்டுக்காலை அனைத்து மசாலாக்களுடனும் சேருமாறு நன்கு பிசறி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

5. குக்கரில் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர் அல்லது ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி கொதிக்க விடவும்.

6. கொதி வந்ததும் குக்கர் மூடியைப் போட்டு வெயிட் போட்டு தீயை நடுத்தரமாக எரியவிடவும். இல்லையென்றால் குழம்பு தெறிக்கும். நான்கு அல்லது ஐந்து விசில் வரை வேகவிடவும். பிறகு தீயை குறைத்து (சிம்மில்) வேகவிடவும். ஆட்டுக்கால் இளசானதாக இருந்தால் 20 நிமிடத்திலும் இல்லையென்றால் 30 நிமிடத்திலும் வெந்துவிடும்.

7. வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்ப் பால் பாதாம் கலவையை ஊற்றி மீண்டும் கொதிக்க விடவும். பிறகு ஒரு கரண்டி மிளகு தூள் சேர்க்கவும்.

8. தனியே தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் ஆட்டுக்கால் குழம்பில் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு

1. காலில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணெய் கொஞ்சமாக ஊற்றினால் போதும்.

2. இதை முட்டு வலிக்கு மாதம் இருமுறை செய்து சாப்பிடலாம். மூட்டு பலம் பெறும்.

3. குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது இதை சூப்பாகவும் வைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தகுந்தமாதிரி காரம் குறைத்து நெய்யில் கூட தாளிகலாம். செய்து முடித்து வடிகட்டி கொடுக்கவும்.

4. குளிர் காலங்களில் இது போல் மிளகு சேர்த்து செய்து சாப்பிடலாம். காரம் தேவைப்படுபவர்கள் இன்னும் கூட்டிக் கொள்ளலாம்.

5. இந்த ஆட்டு காலில் குருமாவும், சூப்பும் செய்யலாம்.

6. சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா, இட்லி, இடியாபம், தோசை, ஆப்பம், நெய் சோறு ஆகிய அனைத்திற்கும் இதை தொட்டு கொள்ளலாம்.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/mutton/aattukkaalmilagukuzhambu.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs