புளி குழம்பு தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 3 புளி - எலுமிச்சை அளவு தேங்காய் - 1/2 மூடி ஏதாவது ஒரு காய் - 100 கிராம் பூண்டு - 1 வெந்தயம் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை பொட்டுக்கடலை - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு - 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன் உளுந்து - 1/2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை 1. வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கு பொருட்களைப் போட்டு தாளித்து பிறகு வெந்தயத்தை சேர்த்து, அரிந்த வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். 2. நறுக்கிய காயையும் சேர்க்கவும். 3. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து வதக்கி சிறிது நீர் சேர்த்து கொதிக்க விடவும். 4. அதில் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்க விடவும். 5. பிறகு தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்து அடுப்பில் உள்ள கலவையுடன் சேர்க்கவும். 6. நன்றாக வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, கொத்துமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |