http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா | உருளைக்கிழங்கு குருமா
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா | கடலைப்பருப்பு குருமா
கடலைப்பருப்பு சௌசௌ குருமா | காளான் குருமா
காளிஃபிளவர் பட்டாணி மசாலா | தக்காளி கொத்சு | பச்சைப்பயிறு குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு | பருப்பு சாம்பார் | பாசிப்பருப்பு குழம்பு | புளி குழம்பு
மோர் குழம்பு | வெண்டைக்காய் புளி குழம்பு





உருளைக்கிழங்கு கத்திரிக்காய் குருமா

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 4 (1/4 கிலோ)
கத்தரிக்காய் சிறியது - 5
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய்த் துறுவல் - 1 கோப்பை
பட்டை - 2 (1 இஞ்ச் அளவு)
கிராம்பு - 5
ஏலக்காய் - 1
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கசகச - 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 15
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்துமல்லித்தழை - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்..

2. உருளைக்கிழங்கை தோல் நீக்கி நடுத்தர அளவில் நறுக்கிக் கொள்ளவும்..

3. கத்திரிக்காயின் காம்பை மட்டும் நறுக்கி எறிந்து விட்டு, அடிப்பகுதியை மட்டும் நான்காக பிளந்து கத்திரிக்காய் முழுதாக இருக்குமாறு தண்ணீரில் போட்டு வைக்கவும். .

4. அடுப்பில் வாணலியை வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கவும்..

5. பிறகு இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்..

6. இதனுடன் கசகச, நிலக்கடலை, தேங்காய்த் துறுவல் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து அரைத்து தனியே வைக்கவும்..

7. அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சேர்த்து வெடித்ததும், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்..

8. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போக வதக்கவும்..

9. அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்..

10. இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேகவிடவும்..

11. உருளைக்கிழங்கு பாதி வெந்ததும், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்..

12. இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து லேசாகக் கிளறி, பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்..

13. அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா விழுதினைச் சேர்த்து வாசனை போகும் அளவுக்கு கொதிக்க வைக்கவும்..

14. குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. உருளைக்கிழங்கை பாதி வெந்ததும் கத்திரிக்காய் சேர்த்தால் தான், கத்திரிக்காய் குழையாமல் இருக்கும்.

2. குஸ்கா, புலாவ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/kuzhambu/potatobrinjalkuruma.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs