http://www.samaiyalarai.com

உருளைக்கிழங்கு குருமா | உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு குருமா | கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா | தக்காளி கொத்சு | பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார் | பாசிப்பருப்பு குழம்பு | புளி குழம்பு | மோர் குழம்பு
வெண்டைக்காய் புளி குழம்பு


கடலைப்பருப்பு குருமா

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
தேங்காய் துருவல் - 1/4 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லித்தழை - சிறிதளவு
பட்டை - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
லவங்கம் - 5
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கடலைப்பருப்பை கழுவி சீரகம், மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு முக்கால் பதத்திற்கு குழைந்து விடாமல் தண்ணீரில் வேகவைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. தேங்காயைத் துருவி சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

5. பிறகு இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

6. நன்கு வதங்கியதும், மல்லித்தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

7. ஒரு கொதி வந்ததும் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்க்கவும்.

8. பிறகு வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்று இரண்டாக லேசாக மசித்து, இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பாத்திரம் அடிபிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.

9. பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லித்தழை சேர்க்கவும்.

குறிப்பு

1. கடலைப் பருப்பை குழைய வேக வைத்தால் குருமா கூழாகி விடும்.

2. வேக வைத்த கடலைப்பருப்பை குழம்புடன் சேர்த்ததும், குழம்பு அடிபிடிக்கும். அதனால் அடிக்கடி கிளற வேண்டும்.

3. இதனுடன் புடலங்காய், சௌசௌ, சுரைக்காய் போன்ற காய்களைச் சேர்த்தும் குருமா செய்யலாம்.

4. இக்குருமா இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச.சுதாதேவி
சென்னை-600050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/kuzhambu/kadalaipparuppukuruma.html

பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க

உருளைக்கிழங்கு குருமா | உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
கடலைப்பருப்பு குருமா | கடலைப்பருப்பு சௌசௌ குருமா
காளான் குருமா | தக்காளி கொத்சு | பருப்பு உருண்டை குழம்பு
பருப்பு சாம்பார் | பாசிப்பருப்பு குழம்பு | புளி குழம்பு | மோர் குழம்பு
வெண்டைக்காய் புளி குழம்பு



வருகைப் பதிவு (12-05-2007 முதல்)
flowers

Google






தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.