http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
புடலங்காய் கூட்டு | கத்தரிக்காய் தேங்காய் கூட்டு





கத்தரிக்காய் தேங்காய் கூட்டு

தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 1/4 கிலோ
தேங்காய் - 1/2 மூடி
சின்ன வெங்காயம்- 100 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 12 பல்
புளி - ஒரு நெல்லிகாய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. தேங்காயை 1/2 அங்குல அளவிற்கு சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு, வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

2. இரண்டு தேக்கரண்டி அளவிற்கு தேங்காயை தனியே எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

3. பிறகு சின்ன வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. அடுத்து தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

5. கத்தரிக்காயை நீளவாக்கில் (ஒரு அங்குல அளவிற்கு) வெட்டிக் கொள்ளவும்.

6. புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

7. பாத்திரதை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

8. பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதங்கியதும், பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

9. தக்காளி வதங்கியதும், நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கி, பின்பு வறுத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்.

10. இதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

11. கொதித்ததும் புளிக் கரைசலை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

12. அடுத்து அரைத்த தேங்காய்ப் பாலை ஊற்றி குறைந்த தணலில் நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டியவுடன் இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. தேங்காய்ப் பால் சேர்க்காமலும் செய்யலாம்.

2. விருப்பப்பட்டால் தேங்காயை வெட்டுவதற்கு முன் பின்னால் இருக்கும் கருப்பு ஓட்டை சீவிக்கொள்ளவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/koottu/brinjalcoconutkoottu.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs