கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் - 4 பால் - 2 மேஜைக் கரண்டி கண்டென்ஸ்டுமில்க் - 2 மேஜைக் கரண்டி நெய் - 1/2 கோப்பை ஏலக்காய் - 4 சர்க்கரை - 2 கோப்பை வறுத்த முந்திரி - 10 செய்முறை 1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். 2. துருவிய கேரட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 3. அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை போட்டு வேக விடவும். வேகும் போது நன்கு கிளறி விடவும். 4. நன்கு பதமாக வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்க்கவும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |