லஸ்ஸி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத தயிர் - 1/2 லிட்டர் சர்க்கரை - 2 மேஜைக் கரண்டி ஐஸ் கட்டிகள் - 5 பாலாடை - 3 தேக்கரண்டி செய்முறை 1. ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் உடைத்துக் கொள்ளவும். 2. தயிர், சர்க்கரை, உடைத்த ஐஸ்கட்டிகள் ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். 3. பின்னர் கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றி, பாலாடையை மேலே சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. சர்க்கரைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி உப்பும் சேர்த்து செய்யலாம். 2. விருப்பமுள்ளவர்கள் பாலாடை மீது ரோஸ் எசன்ஸ் ஒரு சொட்டு சேர்த்துக்கொண்டால் வாசனையாக இருக்கும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |