நிலக்கடலை சட்னி தேவையான பொருட்கள் நிலக்கடலை - 2 கோப்பை தேங்காய் துருவல் - 1/2 கோப்பை பூண்டு - 3 பல்லு இஞ்சி - 1 துண்டு வர மிளகாய் - 2 புளி - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை 1. தேங்காய் துருவலை லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். 2. பிறகு மேலே உள்ள அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். 3. பிறகு தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்துப் பரிமாறவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |