http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
கோழிக்கறி குழம்பு | சிக்கன் கிரேவி | சிக்கன் பிரியாணி
லெமன் லாலி பாப் சிக்கன்



லெமன் லாலி பாப் சிக்கன்

தேவையான பொருட்கள்

கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 12 பீஸ்
எலுமிச்சை - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சோள மாவு - 2 மேஜைக் கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்)(லாலி பாப்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

2. பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும்.

4. பிறகு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும்.

6. நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார்.

குறிப்பு

1. கோழிக்கறியுடன் ஒவ்வொரு பொருளாக சேர்த்து பிசறுவதால் மசாலா நன்கு பிடிக்கும்.

2. பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும்.

3. கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம் ஊறினாலே போதுமானது. இருந்தாலும் அதிக நேரம் நன்கு ஊறினால் சுவை கூடுதலாக இருக்கும்.

ஆக்கம்

ஜலீலா பானு
துபாய்.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/chicken/lemonlollypopchicken.html




பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs