http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கோழிக்கறி குழம்பு | சிக்கன் கிரேவி | சிக்கன் பிரியாணி
லெமன் லாலி பாப் சிக்கன்





கோழிக்கறி குழம்பு

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2 அல்லது 3
பூண்டு - 15 பல்
இஞ்சி - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருஞ்சீரகம் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 5
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோழிக்கறியை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும்.

3. பூண்டை தோல் உரிக்கவும். அதிலிருந்து 5 பல் பூண்டு, இஞ்சி, சிறிதளவு நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. அடுப்பில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டு சூடாக்கவும்.

5. கிராம்பு வெடிக்கும் போது நறுக்கிய வெங்காயத்தையும் மீதமுள்ள பூண்டையும் போட்டு வதக்கவும்.

6. வெங்காயம், பூண்டு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.

7. பிறகு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைப் போட்டு 2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும்.

8. தண்ணீர் லேசாக கொதிக்கும்போது கழுவி வைத்துள்ள கோழிக்கறியை எடுத்துப்போட்டு நன்கு வேகவிடவும்.

9. கோழிக்கறி நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்.

குறிப்பு

1. விருப்பமுள்ளவர்கள் அரை மூடி தேங்காயை சிறிது பெருஞ்சீரகத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கோழிக்கறி நன்கு வெந்ததும் கடைசியாகச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும் வரை வேகவிடவும்.

2. தேங்காய் சேர்த்த பிறகு அடிபிடிக்கும் ஆகையால் அருகிலேயே இருந்து அடிக்கடி கிளறி விடவும்

3. மல்லித்தூளுக்குப் பதிலாக கோழிக்கறி கரம் மசாலாவும் சேர்க்கலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/chicken/chickenkuzhambu.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs