http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கோழிக்கறி குழம்பு | சிக்கன் கிரேவி | சிக்கன் பிரியாணி
லெமன் லாலி பாப் சிக்கன்





சிக்கன் கிரேவி

தேவையான பொருட்கள்

கோழி கறி (பெரிய துண்டாக) - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 1 (பெரியது)
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 5
கிராம்பு - 5
அன்னாசி பூ - 3
மராட்டி மொக்கு - 2
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கோழிக்கறி துண்டுகளை சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போடவும்.

2. பெரிய வெங்கயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. தோல் உரித்த சின்ன வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, அன்னாசி பூ, மராட்டி மொக்கு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும்.

6. அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை (சுமார் 5 நிமிடம் மிதமான தீயில்) நன்கு வதக்கவும்.

7. அதனுடன் கோழிக்கறி சேர்த்து லேசாக கிளறி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.

8. பின்னர் கோழிக்கறி மிதக்கும் அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கலந்து வேக விடவும். வேகும் போது அடி பிடிக்காமல் இருக்க இரண்டு மூன்று முறை நன்கு கிளறிவிடவும்.

9. கோழிக்கறி நன்கு வெந்து தண்ணீர் சுண்டி கிரேவியாக வரும் வரை வேகவிட்டு, பின்பு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. வாணலிக்குப் பதில் குக்கரிலும் வேக விடலாம். குக்கரில் வேக வைத்தால் தண்ணீர் சிறிது குறைவாக சேர்க்கவும். குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் குக்கர் மூடியைத் திறந்து பார்க்கும் போது தண்ணீர் அதிகமாக இருந்தால் குக்கர் மூடி போடாமல் தண்ணீர் சுண்டி கிரேவியாகும் வரை லேசான தணலில் வேக விடவும்.

2. கோழிக்கறிக்கு இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது பூண்டு இரு மடங்கு அளவும், இஞ்சி ஒரு மடங்கு அளவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

ஆக்கம்

செ.ஹேமாவதி
இடைப்பாடி - 637 101.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/chicken/chickengravy.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs